#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குடும்ப சண்டையில் பேரதிர்ச்சி.. மனைவியின் மண்டையை உடைத்து, இரத்தம் சொட்டச்சொட்ட கொடூர கொலை.!
மதுபோதைக்கு அடிமையான கணவன் மனைவியுடன் சண்டையிட்டு, அவரை கொடூரமாக கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா, ஸ்ரீரங்கப்பட்டணா கனகூங்ரு கிராமத்தில் வசித்து வருபவர் சந்திரசேகர். இவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவரின் மனைவி பிரபாவதி (வயது 28). சந்திரசேகர் மதுபோதைக்கு அடிமையானவராக இருந்த நிலையில், எப்போதும் அளவுக்கு அதிகமாக மதுகுடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதனால் கணவன் - மனநிவியிடையே குடும்ப தகராறு எழுந்து வந்துள்ளது. நேற்று முன்தினமும் வழக்கம்போல மதுபானம் அருந்திவிட்டு சந்திரசேகர் வீட்டிற்கு வந்த நிலையில், அப்போதும் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதில், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சந்திரசேகர், வீட்டில் இருந்த கட்டையை எடுத்து மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இந்த சம்பவத்தில், ப்ரபாவதியின் மண்டை உடைத்து இரத்தம் கொட்டிய நிலையில், அவர் அங்கேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக பலியாகினர். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், பிரபாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, சந்திரசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.