மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
12 வயதில் இருந்து மனைவியின் தங்கை பலாத்காரம்.. குறைபிரசவத்தில் பிறந்து இறந்த பிஞ்சு.. அக்கா கணவன் வெறிச்செயல்.!
மனைவியின் தங்கையான சிறுமியை சீரழித்து வந்த கொடூரனின் செயலால், 16 வயது சிறுமிக்கு குறைபிரசவத்தில் குழந்தை பிறந்து இறந்த சோகம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவமொக்கா மாவட்ட அரசு மருத்துவமனையில், 16 வயது சிறுமி பிரசவத்திற்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் வயதை அறிந்த மருத்துவர்கள், சிறுமியின் உயிரை கருத்தில் கொண்டு அவருக்கு பிரசவம் பார்க்கவே, கருவுற்ற 7 ஆவது மாதத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பின்னர், சிறுமியிடம் மருத்துவர்கள் நடத்திய விசாரணையில், அதிரவைக்கும் பகீர் தகவல் தெரியவந்துள்ளது. சிறுமிக்கு அக்கா மற்றும் அண்ணன் உள்ளனர். இவர்களில் அக்காவுக்கு திருமணம் முடிந்து, அவர் கணவருடன் வசித்து வந்துள்ளார். அக்காவை பார்ப்பதற்கு அவ்வப்போது சிறுமி அவரின் வீட்டிற்கு சென்று வந்த நிலையில், அக்கா கணவரான மாமா சிறுமியிடம் அன்புடன் பழகுவது போல நடித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, சிறுமியை தனது கட்டுப்பாட்டில் கொண்டு, அவரிடம் பாலியல் ரீதியாக பேசி ஆசையை தூண்டி அத்துமீறி இருக்கிறார். இவ்வாறாக கடந்த 4 வருடமாக சிறுமியிடம், அவரின் அக்கா கணவர் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். சிறுமியின் 12 வயதில் இருந்து இக்கொடூரம் நடந்து வந்த நிலையில், தற்போது சிறுமி கர்ப்பமாகியுள்ளார்.
இதனால் அவரின் உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அனைத்தும் தெரியவந்துள்ளது. அப்போது, சிறுமி 5 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், அதனை கலைக்கவும் முடியாமல், குடும்பத்தின் மானம் போய்விடும் என்று நினைத்து புலம்பியுள்ளனர். மேலும், சிறுமியை தனிமையில் வைத்து பராமரித்துள்ளனர்.
மேலும், அவருக்கு 18 வயதாகிவிட்டது என்று கூறி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்துள்ளனர். இந்த நிலையில், சிறுமியின் 7 ஆவது மாதத்தில் பிரசவ வலி ஏற்படவே, அவரை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். அங்கு மருத்துவர்களுக்கு விஷயம் தெரியவந்து, சிறுமியின் உடல்நிலையால் உடனடி பிரசவம் ஏற்பட்டு ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக நேற்று உயிரிழந்தது. மருத்துவர்கள் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு சிறுமியின் அக்கா கணவர் கும்சியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.