மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் கொலை செய்யப்பட்ட விவகாரம்; குற்றவாளியின் அதிர்ச்சி வாக்குமூலம்.. கொதிப்பில் நொறுக்கியெடுத்த உறவுகள்.!
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பியை சேர்ந்த ஏர் இந்திய விமான பணிப்பெண் அயனாஸ் முகம்மது (வயது 21). அவரின் தாய் ஹசீனா (வயது 47). அயனஸின் மூத்த அக்கா அப்னான் (வயது 23), தம்பி அசீம் (வயது 14).
கடந்த நவம்பர் 12ம் தேதி இவர்கள் தங்களின் வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல் துறையினர், அயனாஸுடன் பணியாற்றி வந்த பிரவீன் சௌகலே என்பவரை நேற்று கைது செய்தனர்.
அவரிடம் நடத்த விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலமானது. அதாவது, விமான பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்த அயனாஸ் மற்றும் பிரவீன் ஆகியோர் காதலித்து வந்துள்ளனர்.
ஆனால், ப்ரவீனுக்கு ஏற்கனவே திருமணமாகியிருந்த நிலையில், அதனை மறைத்து அயன்ஸை காதல் வலையில் வீழ்த்தியதாக தெரியவருகிறது. இந்த உண்மையை அறிந்த அயனாஸ், ஒருகட்டத்தில் தனது காதலரை விட்டு புரிந்துள்ளார்.
இந்த பிரிவில் விருப்பம் இல்லாத பிரவீன், சம்பவத்தன்று தனது காதலியை கொலை செய்யும் நோக்கில் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், அங்கு அவரின் குடும்பத்தினரையும் ஆத்திரத்தில் கொலை செய்து தப்பி வந்துள்ளார்.
இரவு 9 மணியளவில் காதலியின் வீட்டிற்க்கு சென்ற பிரவீன், 15 நிமிடங்களில் மீண்டும் ஆட்டோ ஸ்டாண்டுக்கு திரும்பி வந்து, வேறொரு ஆட்டோவில் எதுவும் தெரியதுபோல் தப்பிச்சென்றார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், குற்றவாளி விசாரணைக்காக நிகழ்விடத்திற்கு நேரில் அழைத்து செல்லப்பட்டார். இதனை அறிந்த பாதிக்கப்பட்ட நபர்கள், குற்றவாளியை சூழ்ந்துகொண்டு நொறுக்கியெடுத்தனர்.
அவர்களின் பிடியில் இருந்து பிரவீனை காப்பாற்ற, காவல் துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை களைத்து குற்றவாளியை மீட்டு வந்தனர்.