ரூ.80 இலட்சம் செலவில், கடலில் அமைக்கப்பட்ட மிதப்பு பாலம் 3 நாட்களில் சேதம்.. எம்.எல்.ஏ-வை கதறவிடும் நெட்டிசன்கள்.!



karnataka-udupi-beach-floating-bridge-collapsed-issue

கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி தொகுதி பாஜக எம்.எல்.ஏ கே. ரகுபதி பட். இவர் கடந்த மே 6 ஆம் தேதியில், உடுப்பியில் உள்ள மால்பே கடற்கரையில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களை கவரும் வகையில் அமைக்கப்பட்ட மிதக்கும் பாலத்தினை திறந்து வைத்தார். 

இதற்கு ரூ.80 இலட்சம் தொகை செலவிடப்பட்டதாகவும் தெரியவருகிறது. மேலும், கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் பாலத்தை மக்கள் காண செல்ல வேண்டும் என்றால், அவர்களுக்கு நபருக்கு 15 நிமிடம் அனுமதி வழங்கப்படும். அதற்காக ரூ.100 கட்டணம் வசூலிக்கப்படும். பயணிக்கு ஒரு உயிர்காக்கும் ஜாக்கெட் வழங்கப்படும். 

இந்த நிலையில், ரூ.80 இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட மிதக்கும் பாலம், 3 நாட்களில் (மே 9 ஆம் தேதி) கடலில் பாதியளவு அறுபட்டு கயிற்று இணைப்புடன் தொங்கிக்கொண்டு உள்ளது. சில மிதவைகள் கடலில் மிதந்து கரையொதுங்கிவிட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.