பாலியல் தொல்லை கொடுத்தவனை ஊர்மக்கள் முன் செருப்பால் அடித்த கல்லூரி மாணவி; அசத்தல் சம்பவம்.!



karnataka-udupi-girl-beat-man


கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டம், குந்தாபுரா பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி இன்று வழக்கம்போல கல்லூரிக்கு சென்றுகொண்டு இருந்தார். 

அந்த சமயத்தில், 35 வயது மதிக்கத்தக்க வாலிபர், கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனைக்கண்ட ஊர்மக்கள் இளைஞரை மறித்து பிடித்துள்ளனர். 

பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணின் கைகளில் செருப்பை கொடுத்து இளைஞனை தண்டிக்க வைத்துள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.