மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எச்சரிக்கையை மீறி கடலில் ஆனந்த குளியல், செல்பி.. 2 கல்லூரி மாணவர்கள் பரிதாப மரணம்.!
கடலோர காவல்படையினரின் எச்சரிக்கையை மீறி கடலில் குளித்து செல்பி எடுத்த 2 கல்லூரி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரி நகரில் வசித்து வருபவர் சதீஷ் சந்திஹள்ளி (வயது 21). பாகல்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் எஸ். கல்யாணஷெட்டி (வயது 21). இவர்கள் இருவரும் பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகத்தில் படித்து வருகின்றனர்.
இவர்கள், தங்களுடன் பயின்று வரும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் உடுப்பி மல்பேவுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். பின்னர், அங்குள்ள செயின்ட் மேரிஸ் தீவுக்கு சென்ற நிலையில், கடலுக்குள் செல்ல கூடாது. கரையிலேயே நின்று வேடிக்கை பார்க்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்து ஒவ்வொருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில், கடலோர காவலர்களின் எச்சரிக்கையையும் மீறி சதீஷ் மற்றும் கல்யாண் ஷெட்டி ஆகியோர் கடலுக்குள் இறங்கி செல்பி எடுக்க முயற்சித்த நிலையில், இருவரும் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் தொடர்பாக மல்பே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.