மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
காதலியை ட்ராவல் பேக்கில் அடைத்து, ஆண்கள் விடுதிக்கு அழைத்து சென்ற காதலன்.. வீணாகிப்போன இராஜதந்திரம்..!
தனது காதலிக்கு ஆண்கள் விடுதியை சுற்றிக்காண்பிக்க, கல்லூரி மாணவர் செய்த இராஜதந்திரம் வீணாகி சிக்கிக்கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி, மணிபால் பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியிலேயே மாணவர்கள் தங்கியிருக்க விடுதி வசதியும் உள்ள நிலையில், நேற்று முன்தினம் இரவில் மாணவர் ஒருவர் வெளியே சென்றுள்ளார். பின்னர், நீண்ட நேரம் கழித்து அதே மாணவர் ட்ராவல் பேக்குடன் வருகை தந்துள்ளார்.
இதனைக்கண்ட விடுதி காவலாளி சந்தேகமடைந்து, ட்ராவல் பேக்கை சோதனை செய்ய தருமாறு கூறியுள்ளார். அதற்கு மாணவர் மறுப்பு தெரிவித்து, ட்ராவல் பேக்கை தனது அறைக்கு எடுத்து செல்ல முயற்சித்துள்ளார். சந்தேகத்தில் உறுதியான காவலாளி, மாணவரை நிறுத்தி ட்ராவல் பேக்கை சோதனை செய்துள்ளார்.
அப்போது, கை-கால்களை மடக்கிக்கொண்டு பெண்ணொருவர் தலையை வெளியே தூக்கி எட்டிப்பார்க்க, காவலாளி மற்றும் பிற மாணவர்களுக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மாணவரிடம் இது குறித்து கேட்கையில், அவர் எனது காதலி என்று கூறியுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக மணிபால் காவல் துறையினருக்கு விடுதியின் காவலாளி தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மாணவர் மற்றும் அவரின் காதலியிடம் நடத்திய விசாரணையில், "நாங்கள் இருவரும் காதலர்கள். காதலியை விடுதிக்கு அழைத்து வந்து சுற்றி காண்பிக்க ஆசைப்பட்டேன். பெண்களுக்கு அனுமதி இல்லை என்பதால், ட்ராவல் பேக்குக்குள் மறைத்து அழைத்து செல்ல முயற்சித்தேன். வேறு நோக்கம் எதுவும் இல்லை" என்று தெரிவித்தனர்.
மேலும், பெண்ணும் இந்த தகவலை உறுதி செய்ததால், இருவரையும் எச்சரித்த காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். மாணவரின் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விஷயம் தொடர்பான சி.சி.டி.வி வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது.