மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
Ex-காதலி கழுத்தை கறகறவென அறுத்து காவல் நிலையம் சென்ற காதலன்.. நடந்த பயங்கரம்., பகீர் தகவல்.!
முன்னாள் காதலியின் தொல்லை தாங்க இயலாத இன்னொரு பெண்ணின் கணவன், முன்னாள் காதலியின் கழுத்தை அறுத்து காவல் நிலையத்திற்கு எடுத்து சென்று சரணடைந்த பயங்கரம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயநகரத்தில் வசித்து வருபவர் போஜராஜா (வயது 25). இதே பகுதியில் நிர்மலா (வயது 21) என்ற இளம்பெண் வசித்து வருகிறார். நிர்மலா அங்குள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் மூன்றாம் வருடம் படித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் பின்னாளில் காதலாக மாறவே, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் நிர்மலாவின் வீட்டிற்கு சென்று போகராஜா பெண் கேட்டுள்ளார். இவர்களின் காதல் விவகாரத்திற்கு நிர்மலாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்து, திருமணத்திற்கு பெண் தர இயலாது என்று கூறியுள்ளனர். இதனால் போகராஜா சில மாதங்கள் கழித்து மற்றொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
இந்த திருமணத்திற்குப்பின் டிராக்டர் ஓட்டுநராக போகராஜா பணியாற்றி வந்த நிலையில், நிர்மலா காதலனை பிரிய இயலாமல் தவித்துள்ளார். ஒரு கட்டத்தில் காதலனை மிரட்ட தொடங்கவே, இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை உன் மனைவியிடம் காண்பிப்பேன் என தெரிவித்துள்ளார்.
இதனால் மனஉளைச்சலான போகராஜா நிர்மலாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று, கல்லூரியை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய நிர்மலாவை பின் தொடர்ந்து வந்த போகராஜா, நிர்மலாவின் வீட்டில் ஆட்கள் இல்லாத சூழ்நிலையை தெரிந்துகொண்டு வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
அங்கு இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்படவே, ஆத்திரத்தில் நிர்மலாவின் கழுத்தை கத்தியால் அறுத்து துண்டாக்கிய போகராஜா, கண்ணபோரானை கட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் போகராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.