மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிள்ளைகளா அது?.. கொஞ்ச நேரம் புருசனோட சந்தோசமா இருக்க விடுதா?.. சித்தி செய்த பரபரப்பு கொலை.!
கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகள், தற்போதைய உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக இருப்பதால் நடந்த கொலை முயற்சியில், 1 குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் சித்தி கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள விஜயபுரா மாவட்டம், மிஞ்சநாளா கிராமத்தை சார்ந்தவர் வினோத் சவான். இவரது முதல் மனைவி சாருபாய். இந்த தம்பதிக்கு 5 வயதில் சுமித், 3 வயதில் சம்பத் என்ற ஆண் குழந்தைகள் இருந்துள்ளனர். சாருபாய் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்ட நிலையில், கடந்த 2 மாதத்திற்கு முன்னதாக வினோத் சவான் சவிதா என்ற பெண்ணை இரண்டாவதாக மணம் முடித்துள்ளார்.
திருமணத்தை தொடர்ந்து, கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 2 குழந்தைகளை சவிதா வளர்க்க தொடங்கிய நிலையில், நேற்று முன்தினம் மாலை நேரத்தில் குழந்தைகள் இருவரும் கடலைக்காய் சாப்பிட்டதாகவும், அதன்பின்னர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கீழே விழுந்ததாகவும் சவிதா அக்கம் பக்கத்தினரிடம் கூறி கதறி அழுதுள்ளார். உடனடியாக, அக்கம் பக்கத்தினர் சுமித் மற்றும் சம்பத்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்துள்ளனர்.
சுமித்தை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவிக்கவே, சம்பத்திற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இரண்டு குழந்தைகளின் கழுத்திலும் காயம் இருக்கும் நிலையில், பரிசோதனையில் குழந்தைகள் கடலைக்காய் சாப்பிட்டு இறக்கவில்லை என்றும், கழுத்தை இறுக்கியதால் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. மற்றொரு குழந்தை உயிருக்கு போராடுகிறது என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, விஜயபுரா காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சுமித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சவிதாவிடம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், கணவருடன் சந்தோசமாக வாழ, அவரது முதல் தாரத்தின் இரண்டு குழந்தையும் இடையூறாக இருப்பதால் அவர்களை கொலை செய்ய முயற்சித்தேன். செல்போன் சார்ஜ் வயரால் கழுத்தை இறுக்கியதில் சுமித் உயிரிழந்தார். மற்றொருவர் உயிருக்கு போராடுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், சவிதாவிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.