#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பெண்ணை பலாத்காரம் செய்து ஆ., வீடியோ எடுத்து மிரட்டல்.. தொழிலதிபர் செய்ற காரியமா இது..!
தொழிலதிபர் ஒருவர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தார்வார் மாவட்டம் கல்கட்டகி தாலுகா தேவிகொப்பா கிராமத்தில் ஒரு பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
தொடர்ந்து அதே பகுதியில் வசிக்கும் தொழிலதிபரிடம் பெண்ணின் கணவர் கார் டிரைவராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், தொழிலதிபர் அடிக்கடி பெண்ணின் கணவரை வெளியூருக்கு அனுப்பி வைத்துவிட்டு பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும், பெண்ணை ஆபாசமாக படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து, வெளியே கூறினால் ஆபாசபடங்களை இணையதளத்தில் பதிவிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன பெண் இதுகுறித்து கல்கட்டகி மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், காவல்துறையினர் விசாரணை நடத்தி எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர்.
தொழிலதிபரை கைது செய்ய போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், மனமுடைந்த பெண் போராட்டம் செய்யப்போவதாக தெரிவித்திருக்கிறார்.