மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சென்னை வழியே திருப்பதி சென்ற பெண்ணுக்கு ஒமிக்ரான் உறுதி.. அதிகாரிகள் அலர்ட்..!
கென்யா நாட்டில் இருந்து, ஆந்திர பிரதேசம் மாநிலத்தை சார்ந்த 39 வயது பெண்மணி விமானம் மூலமாக சென்னைக்கு வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து பெண்மணி கார் உதவியுடன் திருப்பதிக்கு சென்றுள்ளார்.
இவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், பெண்மணிக்கு ஒமிக்ரான் வகை கொரோனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து, அவரின் குடும்பத்தை சார்ந்த 6 பேருக்கும் கொரோனா பரிசோதனை நடந்தது.
இதில், அவரது குடும்பத்தினருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது. இருந்தபோதிலும், அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பெண்ணுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.