திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
முறுக்கு சாப்பிட்ட ஒரு வயது குழந்தை மூச்சுத்திணறி பரிதாப பலி: குழந்தை பராமரிப்பில் பெற்றோர்களே கவனம்.!
கேரளா மாநிலத்தில் உள்ள ஆலப்புழா, மாவெலிக்கரா பகுதியை சேர்ந்தவர் விஜீஸ். இவரின் மனைவி திவ்யாதாஸ். தம்பதிகளுக்கு ஒரு வயதுடைய வைஷ்ணவ் என்ற மகன் இருந்துள்ளார்.
இந்நிலையில், இன்று விஜீஸ் வேலை விஷயமாக பாலக்காடு வரை சென்றுள்ளார். வீட்டில் ஒரு வயதுடைய குழந்தை வைஷ்ணவ், தாயின் பராமரிப்பில் இருந்துள்ளார்.
அப்போது, குழந்தை தாய்க்கு தெரியாமல் கீழே இருந்த முறுக்கை எடுத்து சாப்பிட்டதாக தெரியவருகிறது. இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே, பதறிப்போன திவ்யாதாஸ், மகனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், மகனின் உடலை கண்டு கதறியழுதது காண்போரை சோகத்திற்குள்ளாக்கியது.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த ஆலப்புழா காவல் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.