ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
பூட்டிய அறைக்குள் அலறல் சத்தம்.. இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவி, குத்துவிளக்குடன் கொடூரனாக கணவன்.. பயங்கர செயல்..!
மனைவியின் மீது சந்தேகம் கொண்ட கணவன், தனது அறைக்குள் இருந்த குத்து விளக்கால் மனைவியை அடித்தே கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள ஆலப்புழா கிடங்கம்பரம்பு பகுதியை சேர்ந்தவர் நிகிதா (வயது 25). வார்களாவை சேர்ந்தவர் அனீஸ் (வயது 35). இவர்கள் இருவருக்கும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. நிகிதா திருமணமான சில நாட்களிலேயே கணவரை விவாகரத்து செய்தவர் ஆவார்.
இதற்கிடையில், அனீஷ் உடல்நல பிரச்சனைக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட காரணத்தால், இருவரும் வெளிநாடு சென்று வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு இவர்களுக்குள் புரிதல் இல்லாமல் பிரச்சனை எழுந்துள்ளது. நிகிதாவின் மீது அனீஷுக்கு சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. தனது மனைவிக்கு மற்றொரு ஆணுடன் கள்ளக்காதல் பழக்கம் இருக்கலாம் என்றும் சந்தேகித்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று அனீஷின் அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்கவே, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நிகிதா இரத்த வெள்ளத்தில் இருந்துள்ளார். அனீஷும் இரத்தக்கரையோடு இருந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் கிடைக்கவே, நிகிதாவை அவர்கள் மருத்துவமனைக்கு அனுமதி செய்தனர்.
அவர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட சில நிமிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், விசாரணையில் நிகிதாவின் தலையில் குத்துவிளக்கால் அடித்து கொலை செய்யப்பட்டது அம்பலமானது. இதனையடுத்து, அனீஷை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.