மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஒரே ஸ்கூட்டியில் 5 வானரங்கள்.. இன்ஸ்டா ரீலால் ரியல் போலீசிடம் சிக்கி அவதிப்பட்ட மாணவர்கள்.!
கேரள மாநிலத்தில் உள்ள இடுகையை சார்ந்த கல்லூரி மாணவர்கள் 5 பேராக சேர்ந்த ஒரே ஸ்கூட்டியில் பயணம் செய்துள்ளனர். இந்த ஆபத்தான செயலை சாகசம் என நினைத்து வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு செய்துள்ளனர். இதனைகவனித்த மோட்டார் வாகன துறை அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர்.
மேலும், ஓட்டுநர் உரிமம் வைத்திருந்த மாணவனின் உரிமம் 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஐவரும் இடுக்கி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 சமூக சேவை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாரிகளின் இந்நடவடிக்கை பாராட்டுகளை பெற்றுள்ளது.
அதிகாரிகள் மாணவர்களின் பெற்றோர்களை நேரில் அழைத்து கண்டித்து இருக்கின்றனர். பெற்றோர்களுக்கு மாணவர்களின் முன்னிலையில் எச்சரிக்கை விடுத்து மாணவர்களையும் கண்டித்துள்ளனர். மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடம் சட்டத்தை மீறி இனி நடக்க மாட்டோம் என எழுதி வாங்கி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.