மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அச்சச்சோ.. பேராபத்து.. பரவுகிறது தக்காளி காய்ச்சல்.. குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பகீர்.!
கேரள மாநிலத்தில் புதுவகை தக்காளி காய்ச்சல் எனப்படும் வைரஸ் குழந்தைகளுக்கு பரவி வருகிறது.
கேரள மாநிலத்திலுள்ள கொல்லம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு புதுவகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இதன் அறிகுறிகளாக காய்ச்சல், உடல் வலி, கை, கால் வெள்ளையாக மாறுதல் போன்றவை ஐந்து வயதுக்கு உட்பட்ட ஏராளமான குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகத்தில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையில், தக்காளி காய்ச்சல் எனப்படும் புதிய வகை வைரஸ் பரவி வருவதாக கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து இந்த வைரஸ் மிகவும் வேகமாக பரவி வரும் நிலையில், ஆரியங்காவு, அஞ்சல், நெடுவாத்தூர் போன்ற பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முகாமிட்டு வைரஸ் பரவும் நிலை குறித்து கண்காணித்து வருகின்றனர்.
அத்துடன் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே இந்த பாதிப்பு அதிகமாக இருப்பதால் பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், பொதுமக்களிடம் புதிய வகை வைரஸ் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் கொல்லம் மாவட்டத்தில் கணக்கெடுக்கப்பட்ட நிலையில், இதுவரை 85 குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைச் சேர்த்தால் இன்னும் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.