மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிகிரெட் வாங்கிய ரூ.35 கடனுக்காக ஓட்டுநர் அடித்தே கொலை.. சகோதரர்கள் வெறிச்செயல்..!
பெட்டிக்கடையில் சிகிரெட் வாங்கி பணம் கொடுக்க இழுத்தடித்து வந்தவர், கடையின் உரிமையாளர்களான சகோதரர்களால் அடித்தே கொலை செய்யப்பட்ட பகீர் சம்பவம் நடந்துள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டம், பரவூர் வாணியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் மனு (வயது 35). இவர் ஓட்டுநராக இருந்து வருகிறார், தற்போது வரை திருமணம் ஆகவில்லை. மனு அப்பகுதியில் செயல்பட்டு வரும் மதுபானக்கடை அருகேயுள்ள பெட்டிக்கடையில், ரூ.35 க்கு கடனாக சிகிரெட் வாங்கியுள்ளார். இந்த பணத்தை நீண்ட நாட்கள் ஆகியும் திரும்ப செலுத்தவில்லை.
இந்நிலையில், கடைக்கு மீண்டும் மனு செல்கையில், கடையின் உரிமையாளர் சஜ்ஜன் (வயது 42) ஏற்கனவே வாங்கிய சிகரெட்டுக்கு பணம் தாருங்கள் என்று கேட்டுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்படவே, கடையில் உடன் இருந்த சஜ்ஜனின் சகோதரர் சாஜூவும் வாக்குவாதம் செய்துள்ளார்.
ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற 2 சகோதரர்கள் மனுவை கடுமையாக அடித்து உதைக்கவே, படுகாயமடைந்த அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனால் பதற்றமடைந்த சகோதரர்கள் அங்கிருந்து தப்பி செல்லவே, பொதுமக்கள் மனுவை மீட்டு சிகிச்சைக்காக பரவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மனு உயிரிழந்தார்.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த பரவூர் காவல் துறையினர், மனுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி, வழக்குப்பதிந்து சஜ்ஜன் மற்றும் சாஜுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.