தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கேரள மழை வெள்ளத்தால் உயிரிழப்பு 104 ஆக உயர்வு! வெள்ளத்தில் சிக்கிய பலரை தேடும் பனி!
கோவா, கர்நாடகா, கேரளாவை தொடர்ந்து தமிழகத்தின் நீலகிரி, கோவை மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் அந்த பகுதியில் அணைகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மண் சரிவு, வெள்ளத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.
கேரளா மாநிலம் முழுவதும் 1318 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, சுமார் 2.60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.கேரளாவில் இடைவிடாது பெய்து வரும் பேய் மழையால், திரும்பிய பக்கமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.
கேரள மாநிலத்தின் வயநாடு, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, பாலக்காடு, மலப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பலர் தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர். மழை வெள்ளத்தில் முக்கிய சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டதால், ஆயிரக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன.
இதுவரை கேரள மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 104 ஐ எட்டியிருக்கும் நிலையில், கோழிக் கோடு, கண்ணூர், மலப்புரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு "ஆரஞ்ச் அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு ரூபாய் 4 லட்சம் இழப்பீடும், வீடு மற்றும் நிலம் இழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடும் வழங்கப்பட உள்ளதாக கேரள அரசு அறிவித்துள்ளது. மேலும் வெள்ளத்தில் சிக்கிய பலரை தேடும் பனியில் மீட்டுப்படையினர் செயல்பட்டு வருகின்றனர்.