திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
அமெரிக்காவுக்கு நோயாளி லிஸ்ட், தங்கக்கடத்தலுக்கு லிங்க் யார்?.. உண்மையை அம்பலப்படுத்திய ஸ்வப்னா?.. கேரள அரசியலில் பேரதிர்ச்சி..!!
ஆட்சிக்கு உதவி செய்த தங்கக்கடத்தல் ராணியை தகரம் வைத்த சிறைக்குள் இராஜதந்திரத்துடன் அடைத்த அரசியல்வாதிகளின் அதிரவைக்கும் பக்கம் குறித்த பரபரப்பு தகவலை தங்கக்கடத்தல் ராணி என்று வர்ணிக்கப்பட்ட சொப்னா தனது சுய சரிதை புத்தகத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பார்சல் மூலமாக கேரளாவுக்குள் தங்கம் கடத்திய வழக்கில், கேரளா அரசுத்துறையில் பணியாற்றிய சொப்னா என்ற பெண்மணி கைது செய்யப்பட்டார். இவரிடம் தங்க கடத்தல் தொடர்பாக சுங்க இலாகா, என்.ஐ.ஏ., மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்ததில் பல உண்மைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் தங்கத்தை எனது தலைமையில் குழுவைத்து கடத்தி வந்தேன் என்பதை போல வாக்குமூலம் அளித்து சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் எழுதிய "சதியன் பத்ம வியூகம்" என்ற பெயரிலான சுயசரிதை புத்தகத்தில் பல பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, "கேரள மாநிலத்தில் மீண்டும் பினராயி விஜயன் ஆட்சியை அமைக்க தங்கக்கடத்தலில் அரசுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பு இல்லை என்று கூறிய ஆடியோவை ஆட்சியாளர்கள் கூறச்சொல்லியுள்ளனர். ஆட்சி மாறினால் தங்களை காப்பாற்றிவிட முடியாது என்பதால் இப்படி கூறுங்கள் என்று ஆடியோவை பெற்றுவிட்டு, மீண்டும் ஆட்சி அமைந்ததும் அவரை கைவிட்டுள்ளனர். மேலும், பினராயி விஜயனை வழக்கில் சிக்கவைக்க சிபிஐ முயற்சிப்பதாகவும் பேசவைத்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் பட்டியலை அமெரிக்காவில் செயல்படும் நிறுவனத்திற்கு முதல்வரின் மகள் வீணா கொடுத்து பல கொடிகளை சம்பாதித்து இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பான தகவலை அறிந்த முன்னாள் அமைச்சர் சைலஜா, சிவசங்கர் இடையே மோதலானது ஏற்பட்டது. முதல்வர், அவரின் குடும்பத்தினர், முதல்வரின் தனிச்செயலாளர் ரவீந்திரன், முன்னாள் செயலாளர் நளினி நேட்டோ, முன்னாள் சபாநாயகர் ராமகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் & எம்.எல்.ஏ ஜலீல் ஆகியோர் அமீரக தூதரக சரக்கு பரிமாற்றத்திற்கு உடந்தையாக இருந்துள்ளார்கள்.
இவர்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவசங்கர் எனக்கு சென்னையில் இருக்கும் பத்மநாதஸ்வாமி கோவிலில் வைத்து தாலிகட்டினார். என்னை கைவிடமாட்டேன் எனவும் வாக்குறுதி அளித்தார். முன்னாள் அமைச்சரும், கேரள சட்டப்பேரவையில் முக்கிய நபராகவும் இருந்தவர் என்னை உல்லாசமாக இருக்க ஓட்டலுக்கு அழைத்து தொல்லை கொடுத்துள்ளார். நான் அவருக்கு உடன்படவில்லை. அவர் எனக்கு ஆபாசமாக அனுப்பிய தகவலை விசாரணை அதிகாரியிடம் கொடுத்திருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இதனால் கேரள அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.