திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஒரே ஒரு மாணவி தேர்வு எழுத தனிப் படகே இயக்கம்! கெத்து காட்டிய கேரள அரசு!
கேரளா மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கரிஞ்சம் பகுதியைச் சேர்ந்த மாணவி சந்திரா ஆலப்புழாவில் உள்ள பள்ளி ஒன்றில் பதினொன்றாம் படித்துவந்துள்ளார். கொரோனா வைரஸ் பரவுவதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11-ம் வகுப்பு தேர்வுகள் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றன.
கொரோனா வைரஸ் பரவி வருவதால் கேரளாவில் பெரும்பாலான இடங்களில் படகு் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாணவி சந்திரா, தேர்வு எழுதச் செல்ல வேண்டுமென்றால் படகு போக்குவரத்தில் தான் செல்ல வேண்டும்.
தற்போதைய சூழலில் தனிப்படகு எடுத்துச்சென்றால் அதிக செலவாகும் என்பதால் அரசின் உதவியை நாடினார் சந்திரா. கேரள மாநில நீர்வழிப் போக்குவரத்துத் துறையை அணுகிய சந்திரா, தான் தேர்வு எழுத வேண்டுமென்பதால் உதவுமாறு கேட்டுள்ளார்.
மாணவியின் கோரிக்கைக்குச் செவிசாய்த்த கேரள அரசு, மாணவி சந்திராவுக்காக மட்டுமே 70 பேர் பயணிக்கக் கூடிய படகை இயக்கியது. காலை 11.30 மணிக்கு சந்திராவை ஏற்றிக்கொண்டு 12 மணிக்குப் பள்ளியைச் சென்றடைந்தது படகு. சந்திரா தேர்வு எழுதி முடிக்கும் வரை அங்கேயே காத்திருந்த படகு மீண்டும் மாலை 4 மணிக்கு சந்திராவை வீட்டில் இறக்கிவிட்டுள்ளது.
இதுபோன்ற படகை தனியாக வாடகைக்கு எடுக்கும் போது ஒரு டிரிப்புக்கு ரூ.4 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் சந்திராவிடம் ரூ.18 மட்டுமே வசூலித்துள்ளனர். இச்சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.