14 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க அனுமதி; கேரளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!



kerala HC Judgement on 14 Aged Minor Girl Pregnancy Abortion 

கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சியை சேர்ந்த 14 வயது சிறுமி, 19 வயது இளைஞர் ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனால் சிறுமி கர்ப்பமான நிலையில், அவரின் தாயாருக்கு விஷயம் தெரியவந்துள்ளது. 

பின் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, இளைஞர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை கலைக்க நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. 

எதிர்தரப்பு வாதங்கள் பெண்ணின் தாய் கோரிக்கைக்கு எதிராக அமைய, நீதிபதிகள் அதிரடி கருத்துக்களை முன்வைத்தனர். அதாவது, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வயிற்றில் உள்ள கருவை வளர்க்க பெண்ணை கட்டாயப்படுத்த இயலாது. 

கர்ப்பம் தொடரும் பட்சத்தில், கர்ப்பிணி பெண்ணின் உடல் மற்றும் மனதில் ஏற்படும் கடுமையான காயத்தை முறித்துக்கொள்ளலாம் என மருத்துவ கருவுறுதல் சட்டம் கூறுகிறது. 

கற்பழிப்பால் ஏற்படும் கர்ப்பம், அதனால் ஏற்படும் வேதனை, கர்ப்பிணி பெண்ணின் மனரீதியான ஆரோக்கியத்திற்கு காயத்தை தரும். பெண் ஒருவரை பலாத்காரம் செய்த நபரின் கருவை வளர்க்க பெண்ணை கட்டாயப்படுத்துவது தவறானது. இதனால் நீதிமன்றம் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி வழங்குகிறது என கூறினர்.