மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கேரளாவில் ஓமிக்ரானின் மூன்றாவது அலை பரவல் - சுகாதாரத்துறை அமைச்சர் பரபரப்பு பேட்டி.!
மஹாராஷ்ட்ரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் ஜன. 27 ஆம் தேதி நிலவரப்படி 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், கேரள மாநிலத்தில் ஒமிக்ரான் வகை தொற்று பரவல் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசுகையில், "கேரள மாநிலத்தில் கொரோனா பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டதில், 94 % ஒமிக்ரான் பாசிட்டிவாக இருக்கிறது. 6 % டெல்டா வகை உள்ளது. இதனால் கேரளாவில் மூன்றாவது அலையாக ஒமிக்ரான் உள்ளது தெளிவாகியுள்ளது.
மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் 4 % க்கும் குறைவானவர்கள் மருத்துவமனையில் அனுமதி செய்யப்படுகின்றனர். இவர்களில் 1 % க்கும் குறைவான நபர்களுக்கு ஆக்சிஜன் வசதி தேவைப்படுகிறது" என்று தெரிவித்தார்.