தனது இதய நோய் சிகிச்சைக்கான பணத்தை கேரள மக்களுக்கு அளித்த தமிழக சிறுமி! அவரை வியப்பில் ஆழ்த்திய பிரபல கேரளா மருத்துவமனை!



Kerala hospital announced free treatment for tamilnadu girl akshaya

கேரளா மாநிலத்தில் கடந்த நூறு வருடங்களுக்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் கேரளா மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மக்கள் அனைவரும் தங்க இடம் இல்லாமல் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார். உன்ன உணவில்லாமல், தங்களது உடைமைகளை இழந்து உறவுகளை இழந்து தவித்துவருகின்றனர்.

kerala flood

இந்நிலையில் உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து உதவிகள் வந்தாலும் தந்து அண்டை மாநிலத்தவருக்கு உதவுவதில் தமிழகம் சற்று மேலோங்கியே காணப்படுகிறது.

இந்நிலையில் , இதய நோய் சிகிச்சைக்கு என சேமித்து வைத்திருந்த பணத்தில் கேரள 
வெள்ளநிவாரணத்திற்கு உதவிய சிறுமி அக்ஷயாவை கேரளா மருத்துவமனை ஓன்று வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுமி அக்ஷயா இதைய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக சமூக வலைத்தளங்கள் மூலம் 3 லட்ச ரூபாய் நிதி திரட்டப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை நடைபெற்றுள்ளது.

தனது இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சைக்காக சமூகவலைத்தளங்களில் இவருக்கு நிதி திரட்டும் பனி நடைபெற்று வரும் நிலையில் இது வரை இருவது ஆயிரம் வரை நிதி கிடைத்துள்ளது. தனக்கு கிடைத்த இந்த நிதியில் இருந்து ஐந்து ஆயிரம் ரூபாய் கேரளாவிற்கு நிவாரணமாக அளிப்பதாக அக்ஷயா தெரிவித்துள்ளார்.

kerala flood

இந்த தகவல் சமூக வலைதளத்தில் பரவலாக பேசப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்தது. இதை அறிந்த கேரளாவின் புகழ்பெற்ற சித்திரை திருநாள் மருத்துவமனை, சிறுமி அக்‌ஷ்யாவின் சிகிச்சையை இலவசமாக செய்து தர முன்வந்துள்ளது.

சிறுமியின் நல்ல மனத்திற்காகவும், அவரின் உதவி செய்யும் குணத்திற்காகவும் இந்த சிகிச்சையை இலவசமாக செய்வதாக கேரளா மருத்துவமனை தெரிவித்துள்ளது.