திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
நரபலி கொடுத்து உடலை தின்ற கொடூரம்.. மலையாள மந்திரவாதி பேச்சை கேட்டு நடந்த பயங்கரம்.. 2 பெண்கள் கொலை..!
செல்வம் பெறுக பெண்ணை நரபலி கொடுத்து நடந்த பயங்கரம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம், காலடி பகுதியில் வசித்து வருபவர் ரோஸ்லின் (வயது 50). இவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் வீட்டில் இருந்து கடைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்த விஷயம் தொடர்பாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.
இதனைப்போல, தமிழ்நாட்டில் உள்ள தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் பத்மா (வயது 52). இவர் கேரளாவில் தங்கியிருந்து லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த நிலையில், கடந்த மாதத்தில் மாயமானார். இதுகுறித்து பத்மாவின் மகன் எர்ணாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிந்த காவல் துறையினர் பத்மாவை தேடி வந்தனர்.
தனிப்படை காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பத்மாவை திருவல்லா பகுதியில் முகமது ஷபி என்பவர் அழைத்து செல்வது உறுதியானது. அவரிடம் நடந்த விசாரணையில் பத்மா கொலை செய்யப்பட்டு திருவல்லாவில் இருக்கும் வைத்தியர் பகவந்த் என்பவரின் வீட்டுக்கு பின்புறம் புதைக்கப்பட்டது அம்பலமானது. காவல் துறையினர் நிகழ்விடத்தில் தொண்டுகளில் மற்றொரு உடலும் கண்டெடுக்கப்பட்டது.
அந்த உடல் யாருடையது? என்ற விசாரணையில் அது ரோஸ்லின் என்பது உறுதியானது. இவர்களை எதற்காக கொலை செய்தீர்கள்? என்று முகமது ஷபி மற்றும் பகவந்த் ஆகியோரிடம் நடந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் அம்பலமானது. அதாவது, சித்த வைத்தியராக இருந்து வந்த பகவனத்துக்கு போதிய வருவாய் இல்லை. இதனால் செல்வம் பெறுக வேண்டி மந்திரவாதி முகமது ஷபியை சந்தித்து இருக்கிறார்.
அவரோ பெண்களை நரபலி கொடுத்தால் பணம் பெருகும் என்று கூற, எர்ணாகுளத்தில் இருந்த ரோஸ்லினுக்கு சினிமா ஆசைகாட்டி அரை நிர்வாணமாக படுக்க வைத்து தலையை சுத்தியால் அடித்து, மார்பகத்தை அறுத்து பலி கொடுத்துள்ளனர். பின்னர், அந்த உடலை 56 துண்டுகளாக வெட்டி வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர். பின்னர், தர்மபுரியை சேர்ந்த பத்மாவத்தையும் அதனைப்போல அழைத்து வந்து 5 துண்டாக வெட்டி நரபலி கொடுத்திருக்கின்றனர்.
இந்த நரபலிக்கு பகவந்தின் மனைவியான லைலாவும் உடந்தையாக இருந்திருக்கிறார். மேலும், கொலையான உடல்களை நரபலி முடிந்ததும் பகவத்தின் மனைவி லைலா சாப்பிட்டும் இருக்கிறார். இந்த தகவலை அறிந்த அதிகாரிகள் அதிர்ந்துபோன நிலையில், மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.