மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நாடே அதிர்ச்சி.. 16 வயது சிறுமி 14 வயது சிறுவனால் பாலியல் பலாத்காரம்.. தம்பி போல பழகி., கர்ப்பமான பரிதாபம்.!
வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்த 14 வயது சிறுவன் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.
கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூரில் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். இவரின் பெற்றோர் தினமும் வேலைக்கு சென்று மாலையில் வீடு திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனால் சிறுமி மட்டும் வீட்டில் தனியே இருந்து வந்துள்ளார். இவர்களின் வீட்டருகே மற்றொரு குடும்பம் குடிபெயர்ந்து வந்துள்ளது.
அந்த குடும்பத்தில் தம்பதிக்கு 14 வயது மகன் இருக்கும் நிலையில், இவர் அவ்வப்போது சிறுமியின் வீட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில், சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக கூறி பெற்றோரிடம் அழவே, பெற்றோர் மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்யவே, குழந்தைகள் நலத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சிறுமியிடம் வசியராணி நடத்தியுள்ளனர். அப்போது, சிறுமி தெரிவித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, சிறுமியின் வீட்டருகே வசித்து வந்த 14 வயது சிறுவன், சிறுமியிடம் நட்பாக அக்கா என்ற முறையில் பழகுவது போல நடித்துள்ளான். பின்னர், அவ்வப்போது அவரின் வீட்டிற்கு சென்று நன்மதிப்பை பெறுவது போல பாவித்து, சம்பவத்தன்று சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
அத்துமீறிய கொடூரன் இதனை வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் எனவும் மிரட்டியதால், அவரும் பயத்தில் வெளியே எதையும் கூறாமல் இருந்துள்ளார். மருத்துவமனையில் மருத்துவர்களின் சிகிச்சையில் கர்ப்பம் உறுதியானதை தொடர்ந்து, விசாரணையில் தனக்கு நேர்ந்ததை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் குறித்து சிறுமியின் தந்தையிடம் புகாரை பெற்ற காவல் துறையினர், வழக்குப்பதிந்து சிறுவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காமுகனின் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.