மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
15 வயது சிறுமியை பூஜைக்கு அழைத்து அனுதினமும் பலாத்காரம்; பெற்றோரின் கண்மூடித்தனமான நம்பிக்கையால் துயரம்.!
கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர், பூத்துப்பறம்பு பகுதியை சேர்த்தவர் ஜெயேஷ். இவர் அப்பகுதியில் தன்னை மந்திரவாதி என அறிமுகம் செய்து வந்துள்ளார்.
இப்பகுதியில் 15 வயதுடைய 10ம் வகுப்பு சிறுமி வசித்து வந்த நிலையில், அவரின் பெற்றோர் சிறுமி நன்கு படிக்க வேண்டும் என எண்ணியுள்ளனர்.
இதனையடுத்து, சாமியார் ஜெயேஷிடம் தெரிவித்தபோது, அவர் சிறுமியை தனது இல்லத்திற்கு அனுப்பி வைக்குமாறும், அங்கு பூஜை செய்தால் மகள் நன்கு படிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
மந்திரவாதியின் பேச்சைக்கேட்டு மகளை அனுப்பி வைக்க, அங்கு பூஜை செய்கிறேன் என இல்லத்திற்குள் வைத்து சிறுமியை ஜெயேஷ் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனிடையே, ஜெயேஷின் நடவடிக்கை மற்றும் சிறுமியின் செயல்பாடுகள் மாற்றம் தொடர்பாக கண்காணித்த சிறுமியின் பெற்றோர், மகளிடம் விசாரித்தபோது அதிர்ச்சி உண்மை அம்பலமானது.
உண்மையை அறிந்து அதிர்ந்துபோன பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து ஜெயேஷ் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.