மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மரக்கிளை முறிந்து விழுந்து பரிதாபம்; பள்ளி வளாகத்தில் 11 வயது சிறுமி பரிதாப மரணம்.!
கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம் உட்பட பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
47 ஆண்டுகள் இல்லாத அளவு பருவ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாழ்வான பகுதியில் இருப்போர் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், காசர்கோடு மாவட்டம் அங்காடிமோகர் பகுதியில் வசித்து வருபவர் யூசுப். இவரின் மனைவி பாத்திமா சைனப்.
தம்பதிகளுக்கு ஆயிஷா என்ற 11 வயது குழந்தை இருக்கிறார். இவர் அங்குள்ள அரசு பணியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் பள்ளி முடிந்த பின்பு வீட்டிற்கு புறப்பட்ட நிலையில், அங்கிருந்த மரத்தின் கிளை முறிந்து விழுது பரிதாபமாக உயிரிழந்தார்.