மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தையை கிணற்றில் வீசி கொன்ற தாய்: நெஞ்சை பதறவைக்கும் துயரம்.!
கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி, சிலம்பில் பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியை, தாய் கிணற்றில் தள்ளி கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. விசாரணையில் நெஞ்சை பதறவைக்கும் தகவலும் அம்பலமாகியுள்ளது.
48 வயது மினி என்ற பெண்மணிக்கு, 8 வயதுடைய அனுஷ்கா என்ற மகள் இருக்கிறார். சிறுமிக்கு வளர்ச்சி மற்றும் அறிவுசார் உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் Down Syndrome என்ற பிரச்சனை இருந்துள்ளது.
இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒருகட்டத்தில் மகளை கொலை செய்ய முடிவெடுத்த தாய் அனுஷ்காவை மனதை கல்லாக்கி கிணற்றில் வீசி இருக்கிறார்.
குழந்தை மாயமானதாக தாய் கூறிய நிலையில், அதிகாரிகள் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமானது. அவரின் உடலும் கிணத்தில் இருந்து மீட்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.