"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
மாலை, இசை, கச்சேரி, கலவரம் இல்லாமல் எளிமையாக திருமணம்.. மாநிலத்தையே ஈர்த்த புதுமண தம்பதி.!
தம்பதிகள் இருவருக்கு திருமணம் நடைபெறும் போது, அந்தந்த மத சடங்குகளின் படி திருமணம் நடைபெறுவது வழக்கம். அட ஏன் சுயமரியாதை திருமணங்களில் கூட மாலை மாற்றித்தான் திருமணம் செய்கிறார்கள். இந்த நிலையில், மாலை மாற்றாமல், மேளதாளங்கள் இன்றி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் சாராம்சத்தை வாசித்து தம்பதி திருமணம் செய்துகொண்ட நிகழ்வு நடந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் மாவட்டம், கருணாகப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் ரெஜின் (வயது 31). இவர் அடூர் கேரள ஆயுதப்படையில் காவல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கோட்டயம் நகரை சேர்ந்தவர் அகிலா (வயது 24). இவர் கேரள பால்வளத்துறை பண்ணையில் பயிற்றுநராக பணியாற்றுகிறார்.
இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, பெற்றோர்கள் நிச்சயம் செய்துகொண்டுள்ளார். திருமணத்தை ஆடம்பரம் இன்றி, எளிமையான முறையில் நடத்த தம்பதிகள் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து, மாலைகள் இன்றி, மங்கள இசை மற்றும் கச்சேரிகள் இல்லாமல் கருணாகப்பள்ளி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின் போது தாலுகா நூலக பேரவை தலைவர் டி.பி சிவன் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் முன்னுரையை வாசித்தார். அதனைத்தொடர்ந்து மணமக்கள் சட்டப்புத்தகத்தின் மீது ஆணையிட்டு, பதிவாளர் பதிவேட்டில் கையெழுத்திட்டனர். கேரளாவில் மிகப்புதுமையாக நடந்த திருமணத்தில் கவிஞர் குரீபுழா ஸ்ரீகுமார், எம்.எல்.ஏக்கள் சுஜித் விஜயன் பிள்ளை, மகேஷ் மற்றும் நகராட்சி தலைவர் ராஜு உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.