#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
குடும்பச்சண்டையில் பச்சிளம் பிஞ்சை தரையில் தூக்கி அடித்த கொடூர தந்தை; கணவன் - மனைவி கைது.. உயிர் ஊசல்.!
கேரளா மாநிலத்தில் உள்ள கொல்லம், குறவன்பாலம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 35). இவர் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும், வேலைக்காக தனது குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார்.
முருகனின் மனைவி மாரியம்மாள் (வயது 23). தம்பதிகளுக்கு பெண் கைக்குழந்தை இருக்கிறது. மதுபானம் அருந்தும் பழக்கம் கொண்ட முருகன், தினமும் வேலைக்கு சென்று மதுபோதையில் வீட்டிற்கு வருவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு 8 மணியளவில் முருகன் வீட்டிற்கு வந்தபோது, குழந்தை அழுதுகொண்டு இருந்துள்ளது. அப்போது, தம்பதிகளுக்கு இடையே தகராறு நடந்துள்ளது. இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற முருகன் குழந்தையை தூக்கி கீழே வீசி இருக்கிறார். இதனால் குழந்தையின் தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், குழந்தையை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்து முருகன் மற்றும் மாரியம்மா ஆகிய இருவரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.