திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
16 வருடமாக குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த தம்பதிக்கு, ஒரே பிரசவத்தில் 4 குழந்தை.. கேரளாவில் நெகிழ்ச்சி.!
கேரளா மாநிலத்தில் உள்ள கோட்டயம், அதிரம்புழா பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். இவரின் மனைவி பிரசன்ன குமாரி. தம்பதிகள் இருவருக்கும் கடந்த 2005 ஆம் வருடம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
ஆனால், திருமணம் முடிந்து 16 வருடங்களை கடந்தும் குழந்தைப்பேறு இல்லாமல் இருந்த நிலையில், பல மருத்துவமனைகளுக்கு சென்றும், கோவில் கோவிலாக அலைந்தும் பலனில்லை. இந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்னதாக பிரசன்ன குமாரி கர்ப்பமாகவே, குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று முன்தினம் அவருக்கு பிரசவ வலி ஏற்படவே, அவரை கோட்டயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக குடும்பத்தினர் அனுமதி செய்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்கையில், வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பது உறுதியானது.
4 குழந்தைகள் வயிற்றில் இருக்கும் நிலையில், சுக பிரசவத்திற்கு அறிகுறி தென்படவில்லை என்பதால் அறுவை சிகிச்சை மூலமாக 4 குழந்தைகளும் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் 1.148 கிலோ, 1.108 கிலோ, 1.120 கிலோ, 1.800 கிலோ என்ற எடை அளவில் இருந்துள்ளது.
அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவு செய்த மருத்துவர்கள், தாயும் - சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், பெண்ணுக்கான பிரசவ செலவினை முழுமையாக தாங்களே ஏற்றுக்கொள்கிறோம் என்றும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.