"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு 23 வயது இளம்பெண் செய்த துணிகரச் செயலால் அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்...
கன்னியாகுமரி கேரளா எல்லையில் அமைந்துள்ள பாறசாலையைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் ஷாரோன் ராஜ். இவர் கல்லூரி படித்து போது அதே கல்லூரியில் பயின்ற கிரீஷ்மா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது.
மேலும் கிரீஷ்மா தனது காதலனுடன் பல டிக்டாக் காணொளிகளை வெளியிட்டு இரண்டு பேரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். இந்நிலையில் கிரீஷ்மா கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேலைக்கு சென்ற நிலையில் ஷாரோன் மேற்படிப்பை தொடர்ந்துள்ளார்.
அந்த சமயத்தில் கிரீஷ்மாவிற்கு வசதியான இடத்திலிருந்து வரன் வந்தததை அடுத்து அவரைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை எழுந்துள்ளது. ஆனால் கிரீஷ்மாவின் ஜாதகத்தில் முதல் கணவர் இறந்துவிடுவார் என்று காணப்பட்டதால், தான் காதலித்த ஷாரோனை தனது பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு பின்னர் வசதியாக வாழ ஆசைப்பட்ட கிரீஷ்மா தனது காதலனை கொலை செய்து விட திட்டம் போட்டுள்ளார்.
அதற்காக கூகுளின் போலீசில் சிக்காமல் கொலை செய்வது எப்படி என்றேல்லாம் தேடிய கிரீஷ்மா கடைசியாக ஷாரோனுக்கு தெரியாமல் குளிர்பானத்தில் ஸ்லோ பாய்சனை கலந்து கொடுத்துள்ளார். குளிர்பானத்தை குடித்ததும் வாந்தி எடுத்த ஷாரோனை பெற்றோர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 25ம் தேதி சிகிசசை பலனின்றி உயிரிழந்தார்.
பின்பு பிரேத பரிசோதனை அறிக்கையில் விஷம் அருந்தியிருப்பதாக தெரியவந்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காதலியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில் கிரீஷ்மாவே வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு ஷாரோனை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. அதனையடுத்து போலீசார் கிரிஷ்மா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தாய் மற்றும் தாய்மாமன் ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.