மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாலை 5 மணிக்கு மேல் கல்லூரி காதல் ஜோடிகள் பேருந்து நிறுத்தத்தில் அமர தடை; கேரளாவில் சர்ச்சை போஸ்டர்.! காரணம் இதுதானாம்.!
கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம், எடவன்னா பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் உள்ளூர் மக்கள் சார்பில் போஸ்டர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், "கல்லூரி மாணவர்கள் மாலை நேரத்தில் 5 மணிக்கு மேல் இருக்க கூடாது. குறிப்பாக ஜோடியாக யாரும் பேருந்து நிறுத்தத்தில் இருக்க கூடாது.
இந்த பகுதியில் குழந்தைகள், குடும்பத்துடன் நாங்கள் வசித்து வருகிறோம். கல்லூரி மாணவர்களின் உரிமையில் தலையிட எங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும், உங்களின் செயல்பாடுகள் சர்ச்சைக்குரிய வகையில் இருக்கிறது.
இதனால் இனிவரும் நாட்களில் 5 மணிக்கு மேல் ஜோடியாக கல்லூரி மாணவ-மாணவியர்கள் இருக்க கூடாது. வரும் பேருந்துகளில் அடுத்தடுத்து பயணித்து சென்றுவிட வேண்டும்.
அறிவிப்பை அலட்சியப்படுத்தி பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் மாணவர்கள் பெற்றோரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள். உங்களுக்கு அவசியம் இருப்பின் தங்களின் வீடுகளுக்கு அழைத்து சென்று உங்களின் விருப்பத்தை நிறைவேற்றுங்கள். பொதுவெளியில் அவை வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.