#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இனி கேரளா இல்லை.. பெயர் மாற்றக்கோரி தீர்மானம்.! சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றம்!!
கேரளா மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என மாற்ற கோரி 2வது முறையாக அம்மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் மிகவும் முக்கியமான மாநிலமாக திகழ்வது கேரளா. கடந்த 1956ம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது கேரளா உருவாகியது. இந்த மாநிலத்திற்கு மலையாளத்தில் 'கேரளம்' என்று பெயர். ஆனால் பிற சில மொழிகளில் கேரளா என அழைக்கப்படுகிறது.
கேரளம் ஆகிறது கேரளா
மேலும் அரசியலமைப்பின் முதல் அட்டவணையிலும் கேரளா என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதனை 'கேரளம்' என மாற்ற வேண்டும் என்று அம்மாநில மக்கள் வலியுறுத்திவரும் நிலையில், நேற்று கேரள சட்டமன்றத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளிலும் தங்களது மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என்று மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து முதல்வர் பினராயி விஜயன் தீர்மானம் கொண்டுவந்தார். அதனை அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொண்டனர்.
இதையும் படிங்க: கொடூரம்... 17 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு .!! தந்தைக்கு 104 வருட சிறை.!!
2வது முறையாக தீர்மானம் நிறைவேற்றம்
ஏற்கனவே கடந்த ஆண்டு இது தொடர்பாக தீர்மானம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்தில் சில குறைகள் இருப்பதாக கூறி மத்திய அரசு அதனை திருப்பி அனுப்பியது. இந்நிலையில் இரண்டாவது முறையாக குறைகள் சரிசெய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தை மத்திய அரசு ஏற்கும் பட்சத்தில் கேரளா, கேரளம் என பெயர் மாற்றம் பெறும்.
இதையும் படிங்க: விஷமாக மாறிய மயோனைஸ்.. குழிமந்தி பிரியாணி சாப்பிட்ட பெண் பலி.!! 85 பேர் மருத்துவமனையில் அனுமதி.!!