திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கொடூரம்... 17 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு .!! தந்தைக்கு 104 வருட சிறை.!!
கேரள மாநிலத்தில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக தந்தைக்கு 104 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. சிறுமி கற்பம் அடைந்தது தொடர்பாக நடைபெற்ற வழக்கில் நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வழங்கி உள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டம் அரிக்கோடு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இது தொடர்பாக அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாய் சிறுமியிடம் விசாரித்துள்ளார்.
அப்போது பெற்ற தந்தையே தனது மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய அதிர்ச்சி உண்மை வெளியாகியிருக்கிறது . இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் தந்தையை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தறிகெட்டு காரை இயக்கிய எம்.எல்.ஏ மருமகன்; 19 வயது இளைஞர் துள்ளத்துடிக்க பலி..!
இந்த வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்த நிலையில் தனது மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தைக்கு 104 வருடங்கள் சிறை தண்டனையும் 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் இந்த விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த 10 ஆண்டுகளாக தந்தையால் பலாத்காரம் செய்யப்பட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கில் வழங்கப்படும் அபராத தொகையை சிறுமிக்கு நிவாரணமாக வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இதையும் படிங்க: நிலத்தகராறில் விவசாயி கண்மூடித்தனமாக அடித்துக்கொலை; நெஞ்சை ரணமாக்கும் காணொளி..!