தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
கேரளாவில் கொட்டித்தீர்க்கபோகும் பேய்மழை; ஆரஞ்சு, மஞ்சள் எச்சரிக்கை விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம்.!
பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் உட்பட பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் உட்பட பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது.
இதன் எதிரொலியாக கேரளா மலைப்பகுதி வழியே கடந்து செல்லும் தென்மேற்கு பருவமழை, வடமாநிலங்களில் மட்டுமல்லாது தென்னிந்திய மேற்கு தொடர்ச்சி மலைகளில் தனது சுயரூபத்தினை காண்பித்து வருகிறது.
இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளம் புகுந்துகொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் கேரளாவில் உள்ள பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திரிசூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், இடுக்கி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.