மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாட்டி வீட்டிற்கு அனுப்ப பெற்றோர் மறுப்பு.. 12 வயது சிறுவன் பகீர் செயல்.. துடிதுடிக்க பறிபோன உயிர்.!
பாட்டி வீட்டிற்கு செல்ல பெற்றோர் மறுத்ததால், 12 வயது சிறுவன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள கோட்டயம் பாம்பாடி பகுதியில் வசித்து வருபவர்கள் சரத்-சுனிதா தம்பதியினர். இவர்களுக்கு 12 வயதில் மாதவ் என்ற ஒரு மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்
இந்த நிலையில், மாதவ் தனது பாட்டி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று நேற்று மாலை 4 மணியளவில் பெற்றோர்களிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், இதற்கு பெற்றோர் மறுத்ததால் கோபமுற்ற சிறுவன் சமயலறைக்கு சென்று மண்ணெண்ணையை தன் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார்.
அப்போது சிறுவன் அலறிய சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர்கள், மாதவ் உடலில் தீப்பற்றி எரிவதை கண்டு, உடனடியாக சிறுவனை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், சிறுவனின் 80 சதவீத உடலில் தீக்காயம் ஏற்பட்டதால், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த பாம்பாடி காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் 12 வயது சிறுவன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.