கேரள மக்களுக்காக தன் சொந்த குரலில் பாடி உஷா உத்துப் அர்ப்பதனித்த பாடலை பாருங்கள்



kerala-people-is-sad-in-song usha uthup

மும்பையில் பிறந்தவரான உஷா உத்துப் பல்வேறு இந்திய மொழிகளில் பாடும் வல்லமை கொண்ட பாடகி ஆவார். அவர் சமீபத்தில் கேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட சோக நிகழ்வுகளை பற்றி ஒரு பாடல் பாடியுள்ளார்.

கேரளாவில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவில் தொடர் மழை பெய்து பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

அங்கு தற்போது மழை நின்று விட்டதால் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றனர். 

kerala flood

இந்நிலையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் மலையாள நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், பார்வதி ஆகியோர் பாடல்களை பாடி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். 

இந்நிலையில் தற்போது, பிரபல பாடகியான உஷா உத்துப், ‘என்டே கேரளா எத்ரே சுந்தரம்’ என்ற தனது பிரபலமான பாடலை, கேரளா வெள்ளப்பெருக்கிற்காக சோகமான பாடலாக பாடியுள்ளார். ‘என்டே கேரளா எத்ரே சங்கடம்’ என தொடங்கும் அந்தப் பாடல், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்பாடலில் கேரளாவில் ஏற்பட்ட நிலையை காட்டப்பட்டுள்ளது. மேலும், கேரளாவிற்கு இந்தப் பாடலை அர்ப்பணிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.