மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர் வெட்டிக்கொலை.. மாநிலமே பதற்ற சூழலால் பரபரப்பு.!
![KErala RSS Worker Killed in Palakkad](https://cdn.tamilspark.com/large/large_keral-rss-47698-1200x630.png)
பாலக்காடு அருகே ஆர்.எஸ்.எஸ் தொண்டர் மர்ம கும்பலால் இன்று வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு, எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் பிராண்ட் அமைப்பின் ஆதரவாளராக இருந்து வந்தவர் சுபைர். இவர் கடந்த வெள்ளிக்கிழமை மசூதியில் இருந்து நள்ளிரவு 01:30 மணியளவில் வீட்டிற்கு செல்லும் போது 5 பேர் கும்பலால் வெட்டிபடுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலைக்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் இருப்பதாக அவர் தரப்பு ஆதரவாளர்கள் குற்றசாட்டை முன்வைத்தனர். இந்த நிலையில், இன்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தொண்டர் ஸ்ரீனிவாஸ் என்பவர் பட்டப்பகலில் 6 பேர் கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை பழிவாங்கும் எண்ணத்துடன் நடைபெற்றதாகவும் உள்ளூர் களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் இருதரப்பு மோதல் ஏற்படலாம் என்ற அச்சம் இருப்பதால், காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.