மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்போன் உபயோகம் செய்வதை கண்டடித்ததால் தாய் கொலை: மனநலம் பாதிக்கப்பட்ட மகன் அதிர்ச்சி செயல்.!
கேரளா மாநிலத்தில் உள்ள கண்ணூர் மாவட்டம், கினிச்சிரா கிராமத்தை சேர்ந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் ஆவார்.
இவர் தனது தாயாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இளைஞர் செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார்.
இதனைக்கண்ட தாய் மகனை அதிக நேரம் செல்போன் பயன்படுத்ததே என கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர், தாயாரை கடுமையாக தாக்கி இருக்கிறார். படுகாயமடைந்த அவர் நேற்று மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், இளைஞரை கைது செய்துள்ளனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.