மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வீட்டின் மேல் மாடியில் இருந்து வந்த துப்பாக்கி தோட்டாக்கள்.! பரிதாபமாக உயிரிழந்த கேரள மாணவி.!
அமெரிக்காவில் கேரளாவை சேர்ந்த 19 வயது மாணவி சுட்டுகொல்லப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள நிராணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மேத்யூ மற்றும் பின்சி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்களும் மரியம் சூசன் என்ற மகளும் உள்ளனர். இவர்களது குடும்பம் 4 மாதஙக்ளுக்கு முன்பு அமெரிக்காவிற்கு சென்று வசித்து வருகின்றனர்.
மரியம் சூசன் உயர் பள்ளிகல்வியை இந்தியாவில் முடித்துள்ள நிலையில் அமெரிக்காவில் படித்துவந்துள்ளார். இந்தநிலையில் மரியம் சூசன் தனது வீட்டில் இருந்தபோது வீட்டின் மேல் மாடியில் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் அவர் மீது பாய்ந்துள்ளது.
தோட்டாக்கள் அவர் மீது பாய்ந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் மரியம் சூசன். அவர் மீது தாக்குதல் நடத்தியவர் மரியம் சூசன் வீட்டின் மேல்மாடியில் வசிப்பவர் என கூறப்படுகிறது. போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.