திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
75 சவரன் வரதட்சணை கொடுத்ததும் போதவில்லை; வற்புறுத்திய கணவர் குடும்பத்தால் இளம்பெண் தற்கொலை.!
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம், திருவல்லம் பகுதியைச் சார்ந்த இளம்பெண் ஷாஹினா. இவரது கணவர் நௌபால். தம்பதிகள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
திருமணத்தின்போது பெண் வீட்டார் சார்பில் 75 சவரன் தங்க நகைகள் வரதட்சணையாக மணமகன் வீட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணின் கணவர் மற்றும் அவரது மாமியார் சுனிதா ஆகியோர் தொடர்ந்து ஷாஹினாவை அடித்து காயப்படுத்தி இருக்கின்றனர்.
இதனால் ஒரு கட்டத்தில் மனமடைந்து போன ஷாஹினா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தற்போது வரதட்சணை கொடுமை தொடர்பான விஷயம் அம்பலமாகி விசாரணை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.