மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சிறுமியை கடத்தி போதைக்கு அடிமையாக்கி கூட்டாக சேர்ந்து மாதக்கணக்கில் சீரழிப்பு.. கேரளாவில் பயங்கரம்.!
வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமியை கடத்தி சென்ற கும்பல், அவரை மாதக்கணக்கில் பலாத்காரம் செய்த பயங்கரம் நடந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டம், ஒற்றப்பாலம் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வந்தார். இவர் கடந்த ஜூன் மாதம் முதலாக மாயமாகினார். இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் சிறுமியை தேடி வந்துள்ளனர்.
இந்த நிலையில், சிறுமி கடந்த ஆகஸ்ட் மாதம் திருவனந்தபுரத்தில் இருக்கும் வீட்டில் மீட்கப்பட்டார். அவர் போதைக்கு அடிமையாகி மோசமான நிலையில் காணப்பட்டுள்ளார். சிறுமியை மீட்ட அதிகாரிகள், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர்.
தற்போது சிறுமியின் உடல்நலம் சீராகி வரும் நிலையில், அவரிடம் அதிகாரிகள் விசாரணை செய்தனர். அச்சமயத்தில் சிறுமி தெரிவித்த தகவல்கள் அதிர்வலையை ஏற்படுத்தின. 4 பேர் கொண்ட கும்பல் சிறுமியை கடத்தி சென்று திருச்சூர், எர்ணாகுளம், திருவனந்தபுரம் உட்பட பல இடங்களுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர், சிறுமியை போதைப்பொருள் உட்கொள்ளவைத்து அதற்கு அடிமையாக்கி இருக்கின்றனர். போதையிலும் கயவர்கள் சிறுமியிடம் கூட்டாக அத்துமீறி இருக்கின்றனர். காவல் துறையினரும் சிறுமியின் அடையாளத்தை வைத்து தேடி வந்து அவரை மீட்டனர்.
சிறுமியிடம் நடந்தை வாக்குமூலமாக பெற்றுக்கொண்ட காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சிறுமியை சீரழித்த 4 பேர் கும்பலை தேடி வருகின்றனர். அவர்கள் கைதானால் பல பரபரப்பு தகவல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.