மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
யூடியூப் பார்த்து சரக்கு தயாரித்து நண்பனுக்கு ஊற்றிவிட்ட 12 வயது சிறுவன்.. உயிருக்கு உலைவைப்பான் தோழன்., உஷார்.!!
இணையத்தளம் நல்ல தகவலை நம்மிடையே வழங்கினாலும், பல பாதிப்புகள் நமது செயல்பாட்டினால் ஏற்படுகிறது. இந்த சூழலில், யூடியூப் பார்த்து மதுபானம் தயாரித்த 12 வயது சிறுவன் சக நண்பனின் உயிருக்கு உலைவைக்க தெரிந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள அரசுப்பள்ளியில் பயின்று வரும் மாணவன், மதுவை தயார் செய்து பள்ளிக்கு சென்று தனது நண்பனுக்கு வழங்கியுள்ளான். இந்த மதுவை குடித்த அச்சிறுவன் வாந்தி எடுத்து மயங்கி விழவே, சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சிறுவனிடம் நடத்திய விசாரணையில், பெற்றோர் வாங்கிவைத்த திராட்சையை பயன்படுத்தி யூடியூப் பார்த்து மதுவை தயாரித்தது அம்பலமானது. ஆனால், இதில் பிற ரசாயனங்கள் ஏதும் சேர்க்கவில்லை என்று சிறுவன் கூறினாலும், பாதுகாப்பு கருதி சிறுவன் தயாரித்த மது ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.