#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சாமியாரின் பிறப்புறுப்பு பெண்ணால் துண்டாக்கப்பட்ட விவகாரம்.. காதல் லீலை சாமியாரை கண்டமாக்கிய சோகம்.!
5 வருடத்திற்கு முன்னர் சாமியாரின் ஆணுறுப்பு பெண்ணால் துண்டாக்கப்பட்ட விவகாரத்தில் பேரதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டு, பெண்மணி மற்றும் அவரின் காதலர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் பகுதியில் வசித்து வந்தவர் கங்கேசானந்தா சுவாமி. இவருக்கு சொந்தமாக திருவனந்தபுரத்தில் ஆசிரமம் உள்ளது. ஆசிரமத்தில் உள்ள வீட்டிற்கு கங்கேசானந்தா சுவாமியின் பெண் பக்தை அவ்வப்போது சென்று தங்குவது வழக்கம். கடந்த 2017 ஆம் வருடம் பிப். 20 ஆம் தேதி பக்தை வீட்டிற்கு சென்ற நிலையில், சாமியார் மர்ம உறுப்பு அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடினார்.
அவரை மீட்ட பிற பக்தர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில், சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், பெண் பக்தையின் மகளை கங்கேசானந்தா சுவாமி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும், மகளின் கற்பை காப்பாற்ற நடந்த தகராறில் வேறு வழியின்றி ஸ்வாமியின் ஆணுறுப்பை அறுத்ததாக பெண்மணி வாக்குமூலத்தை பதிவு செய்திருந்தார்.
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் தெரியவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே, சாமியார் பலாத்கார வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். பக்தையின் மகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கங்கேசானந்தா சுவாமியின் மர்ம உறுப்பை அறுத்த விவகாரத்தை பதிவு செய்தார். முதலில் குற்றத்தை பெண் ஒப்புக்கொண்ட நிலையில், நான் உறங்கும் போது மர்ம நபர்களால் மறுக்கப்பட்டது என வாதத்தை பிதற்றினார்.
இதனால் காவல் துறையினருக்கு பெண்ணின் மீது சந்தேகம் ஏற்பட, வழக்கு விசாரணை குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் மாற்றம் செய்யப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், 5 வருடத்திற்கு பின்னர் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இளம்பெண் ஐயப்ப தாஸ் என்பவரை காதலித்து வந்த நிலையில், காதலுக்கு கங்கேசானந்தா சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, கங்கேசானந்தா சுவாமியை கொலை செய்ய இருவரும் திட்டமிட, சம்பவத்தன்று கடற்கரையில் அமர்ந்து ஆற யோசனை செய்யும் போது ஆணுறுப்பை அறுத்து கொலை செய்ய திட்டம் முடிவு செய்யப்பட்டுள்ளது. திட்டத்தை நிறைவேற்ற சாமியாரின் ஆணுறுப்பை அறுத்த நிலையில், அவரை பக்தர்கள் சேர்ந்து மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றியுள்ளனர்.
பின்னர், வழக்கு விசாரணைக்கு என்ன செய்யலாம் என்று யோசனை செய்கையில், மகளை காரணம் காண்பித்து ஜோடி தப்பிக்க முயற்சித்துள்ளது. ஆனால், இறுதியில் உப்பை தின்றவன் தண்ணீர் குடித்தாகவேண்டும் என்ற பழமொழி உறுதியாகி, இளம்பெண் மற்றும் அவரின் காதலர் ஐயப்ப தாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.