53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
திருவனந்தபுரம் பெண் மேயருக்கு போனில் ஆபாச மெசேஜ்; அரசுப்பேருந்து ஓட்டுநர் கைது.!
கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் மேயராக பணியாற்றி வருபவர் ஆர்யா ராஜேந்திரன். இவரின் செல்போனுக்கு ஆபாச மெசேஜ் மர்ம நபரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த விஷயம் தொடர்பாக மேயர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மேயருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியது யாட்டுக்குன்னல் பகுதியில் வசித்து வரும் அரசுப்பேருந்து ஓட்டுநர் ஸ்ரீஜித் (வயது 35) என்பது உறுதியானது.
இதனையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.