மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தலைக்கவசத்தில் புகுந்த குட்டி ராஜநாகம்: நடுரோட்டில் பதறிப்போன வாகன ஒட்டி.! மக்களே மழை நாட்களில் கவனம்.!
மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கேரளா மாநிலத்தில், வனவிலங்குகள் மற்றும் ஊர்வன போன்றவை அவ்வப்போது வீடுகளிலும், நாம் பயன்படுத்தும் பொருட்களிலும் வந்து தங்குவது இயல்பான விஷயமாகிவிட்டது.
கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியில் வசித்து வருபவர் ஜோசன். இவர் தனது இருசக்கர வாகனத்தில் எப்போதும் வேலைக்குச் செல்வது வழக்கம். அம்மாநிலத்தில் கடுமையான சட்டம் காரணமாக எப்போதும் தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
இந்நிலையில், வழக்கம் போல நேற்று வேலைக்கு சென்றவர் மாலை 4 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியிருக்கிறார். இந்நிலையில், தனது ஹெல்மெட்டில் ஏதோ ஒன்று ஊர்வதை உணர்ந்த அவர், உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு பார்த்தபோது பாம்பு இருந்துள்ளது.
பதற்றத்தில் என்ன செய்வது என தெரியாமல் அவர் நிற்க, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாம்பு பிடிக்கும் நபருடன் வந்த அதிகாரிகள், தலைக்கவசத்தில் இருந்த குட்டி இராஜநாகத்தை மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.
தமிழகத்தை பொறுத்தமட்டில் தற்போது பருவகாலம் தொடங்கவுள்ள நிலையில், மக்கள் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் காலணிகளை அணியும்போது சோதனையிட்ட பின் அணிய அறிவுறுத்த வேண்டும்.