மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மாற்றுத்திறன் சிறுமியிடம் அத்துமீறிய முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் கைது.. பதறவைக்கும் சம்பவம்.!
பெற்றோரை இழந்த மாற்றுத்திறனாளி சிறுமியிடம் அத்துமீறியதாக காங்கிரஸ் பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர், குன்னங்குளம் முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் சுரேஷ். இதே பகுதியில் தாய் - தந்தையை இழந்த மாற்றுத்திறனாளி சிறுமி வசித்து வருகிறார்.
இந்த நிலையில், சுரேஷ் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொல்லை தரவே, விபரம் சிறுமியின் உறவினர்களுக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.