மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கல்லூரியில் படிக்கும் போதே காதல்., தனிமை வீட்டில் பிரசவம்.. பச்சிளம் சிசு சாவு., கல்லூரி மாணவிக்கு சோகம்.!
கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர், பெரும்பாரா பகுதியை சார்ந்த கல்லூரி மாணவி சிந்து (வயது 23). இவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நிலையில், வீட்டிலேயே பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனைத்தொடர்ந்து, பெண்மணிக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சுகாதார பணியாளரின் உதவியை கல்லூரி மாணவி நாடிய நிலையில், அவர் சந்தேகமடைந்து விசாரித்தபோது கர்ப்பம் மற்றும் குழந்தை பிறந்தது தொடர்பான தகவல் தெரியவந்துள்ளது. குழந்தை குறித்து கேட்கையில், அவர் சரிவர பதில் அளிக்காததால் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கல்லூரி மாணவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, குழந்தையின் உடலை வீட்டருகே உள்ள கால்வாயில் இருந்து சடலமாக மீட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.