மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தாயை கற்பழிக்க முயன்ற 70 வயது கிழவனை அறுத்து கூறுபோட்ட 2 சிறுமிகள்.. கேரளாவில் சம்பவம்.!
தன்னை ஈன்றெடுத்த தாயை மாமா பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தால் அவரை கொலை செய்துவிட்டோம் என 2 சிறுமிகள் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மாவட்டம் அம்பலவயல் பகுதியை சார்ந்தவர் முகம்மது (வயது 70). இவருக்கு 2 மனைவிகள் மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில், அனைவரும் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார். முகம்மதுவின் மனைவிக்கு சகோதரர் உள்ள நிலையில், அவருக்கு திருமணம் முடிந்து மனைவி, 15 வயது, 16 வயதில் 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் முகம்மதுவின் வீட்டிற்கு அருகே தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், டிச. 28 ஆம் தேதி மதியம் 15 வயது, 16 வயது சிறுமி மற்றும் அவரது தாய் ஆகியோர் காவல் நிலையத்தில் சென்று சரணடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய காவல் துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
சிறுமிகள் இருவரும் தங்களின் தாயை மாமா பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தால், அவரை வெட்டிக்கொலை செய்து உடலை துண்டுதுண்டாக அறுத்து பல இடங்களில் வீசிவிட்டதாக தெரிவித்துள்ளனர். சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், அவர்களின் வாக்குமூலப்படி முகம்மதுவின் உடல் பாகத்தை மீட்டனர்.
சிறுமிகளின் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்த முகம்மதுவின் குடும்பத்தினர், சிறுமிகள் அவரது மாமாவை கொலை செய்யவில்லை., அவரது தந்தை தான் முகம்மதுவை கொலை செய்திருக்கவேண்டும் என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இதனால் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், சிறுமிகள் தெரிவித்தது உண்மைதானா? என்ற கோணத்திலும், சிறுமியின் தந்தை அவரது அக்கா கணவரை கொலை செய்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.