கொசுக்களால் பரவும் வெஸ்ட் நைல் பீவர்; கேரளாவில் உச்சகட்ட விழிப்பில் சுகாதாரத்துறை.!
கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர், மலப்புரம், கொச்சி ஆகிய மாவட்டங்களில் வெஸ்ட் நைல் பீவர் எனப்படும் புதிய வகை காய்ச்சல் பரவி வருகிறது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் பரவுவுது உறுதி:
இந்த தகவலை உறுதி செய்துள்ள கேரளா மாநில அரசு, அனைத்து மாவட்டத்திலும் தடுப்பு நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகளை உறுதிப்படுத்தி இருக்கிறது.
உஷாராக இருக்க சுகாதாரத்துறை அறிவுரை:
கொசுக்களின் மூலமாக மனிதர்களுக்கு பரவும் தன்மை கொண்ட வெஸ்ட் நைல் காய்ச்சலுக்கு தடுப்பூசி இல்லை என்பதால், மக்கள் தங்களின் சுற்றுப்புறத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.